உடல்நலக்குறைவு காரணமாக எஸ்பிபி அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதிலிருந்தே அவரது உடல் நிலை சீராக இல்லை என தெரிய வந்தது இருப்பினும் தனது விடா முயற்சியின் மூலம் போராடிக்கொண்டிருந்த அவர் இரண்டு தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சினிமா உலகில் உள்ள பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரிலும் சமூக வலைதளப் பக்கங்களில் தனது இரங்கலை தெரிவித்து வந்தனர் ஒரு சிலர் அவரது இறுதி ஊர்வலம் வரை சென்று அவரது உடலை அடக்கம் செய்தனர்.
எஸ்பிபி நெருங்கிய வட்டாரங்களில் இவ்வாறு அவருக்கு அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் எஸ்பிபி, சரணுக்கும் நெருங்கிய நண்பர்களான அஜித் அவர்கள் இந்த இடங்களுக்கு வரவில்லை என்றாலும் ஒரு அறிக்கையாவது விட்டு இருக்கலாம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது அதில் தனது நண்பன் சரண் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எஸ்பிபி அவர்களின் இறப்பு செய்தி கேட்டு தனது அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார். அஜீத் மேலும் சரணை வந்து விரைவில் சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது. இதனை தயாரிப்பாளர் jsk கோபி தெரிவித்துள்ளார்.
தல அஜித் அவர்களின் அப்பா உடல்நிலை தற்போது சீராக இல்லை என்பதால் அவர் இங்கே வர முடியவில்லை. இருப்பினும் ஓரிரு நாட்களில் தனது நண்பர் சரணை வந்து சந்திப்பார் என தெரியவருகிறது.