தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படங்களை கொடுப்பது வழக்கம்.
அந்த படத்தையும் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக கொடுக்க நினைப்பார்கள் அந்த வகையில் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல வருடம் கழித்து இந்தியன் 2 இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் தற்போது மிக பிரமாண்ட பொருட்செலவில் இயக்க திட்டம் தீட்டினார்.
எல்லாம் நல்லா கை கூடவே படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது இருப்பினும் இடையில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் அடைய படம் தள்ளிப்போனது.
அதன்பின் எடுக்கலாம் என படக்குழு முடிவு எடுக்க கொரோனா தோற்று அவர்களது வாயில் மண்ணை வாரி தூக்கி போட்டது.
பல மாதங்கள் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் இயக்குனர் சங்கர் தெலுங்கு நடிகருமான ராம் சரணை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க சென்றுவிட்டாராம். கமலும் அரசியலில் ஈடுபட்டார்.
காஜல் அகர்வாலும் திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையை செம்மையாக வாழ்ந்து வருகிறார் இப்படி இருக்க.. அன்மையில் காஜல்அகர்வால் இந்தியன் – 2 இத்திரைப்படம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
அவர் கூறியது இந்தியன் 2 படம் தாமதமாவதற்கு காரணம் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் அமெரிக்காவில் இருந்து வரவேண்டிய உள்ள சூழல் ஏற்பட்டுள்ளது ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று காரணமாக அவர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெறாமல் இருந்து வருகிறது.
இதுவே உண்மையான காரணம் என தெரிவித்தார்.
மேலும் கமல், ஷங்கர் ஆகிய இரண்டு ஜாம்பவங்களுடன் நான் நடிப்பதில் பெருமை கொள்வதாக கூறினார்.