தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் அமைந்துள்ள சில காட்சிகள் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இல்லாதவாறு இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் எதிர்பார்த்து இருந்தார்கள் ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதவாறு இருந்தது.
இந்த நிலையில் தற்போது வாரிசு படம் நாளைக்கு வெளியாக இருக்கிறது இதனால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலைமை வருகிறது இந்த நிலையில் வாரிசு படத்தில் உள்ள குறைகளை குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ரிலீசுக்கு முன்பு இந்த தகவல் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த பதட்டத்தில் இருக்கிறார்கள்.
அதாவது வாரிசு படத்தை பார்த்த சென்சார் போர்டு உறுப்பினரான “உமர் சந்த்” தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதாவது வாரிசு படத்தில் நடிகர் விஜய் தனது சிறப்பான நடிப்பை காட்டி மிரட்டி உள்ளார். அதுமட்டுமல்லாமல் வாரிசு படத்தில் அனைத்து அம்சங்களும் சூப்பராக இருக்கிறது.
மேலும் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் ஜோடி பொருத்தம் பக்கவா அமைந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து துணை நடிகர்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிகாட்டி உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் அவரே படத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி உள்ளார் அதாவது படத்தில் சில காட்சிகள் தேவையில்லாமல் இருப்பதாகவும் அதை படக்குழுவினர் நீக்கி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் முதல் பாதியில் 15 நிமிடத்தில் உள்ள ஒரு காட்சி ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இரண்டாம் பாதியில் தேவையில்லாத காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் வாரிசு படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.