கடந்த இரண்டு வருட வாரங்களாக விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது மேலும் தற்பொழுது நாமினேஷன் லிஸ்ட் வெளியாகுவதும் தொடங்கி இருக்கிறது அந்த வகையில் அதில் அசீம், ராம் ராமசாமி, தனலட்சுமி, ரட்சிதா, சாந்தி, குயின்ஸி, விக்ரமன், மகேஸ்வரி, ஆயிஷா, நிவாஷினி, சிவின் கணேஷ் மற்றும் ஷெரினா ஆகிய 12 பேர் இடம்பெற்று இருக்கிறார்கள்.
மேலும் இந்த வாரம் இறுதி நாளில் யார் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் தற்போது ஓட்டிங் லிஸ்ட் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது கடந்த சில நாட்களாக ஜிபி முத்துவிடம் மிகவும் கடுமையாக சண்டை போட்டு வரும் தனலட்சுமி தான் பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக வெளியேற வேண்டும் என ஜிபி முத்துவின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.
ஆனால் ஒரு தரப்பு ரசிகர்கள் தனலட்சுமிக்கு தங்களுடைய ஆதரவை பெரிதளவில் கொடுத்து வருகிறார்கள் எனவே கண்டிப்பாக இந்த வாரம் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற மாட்டார் இதனைத் தொடர்ந்து இந்த ஓட்டிங் லிஸ்டில் சீரியல் நடிகை ரக்சிதா அதிக ஓட்டுகளைப் பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தை சீரியல் நடிகர் அசீம் பெற்றிருக்கிறார்.
மேலும் மூன்றாவது இடம் விக்ரமன், நான்காவது இடம் குயின்ஸி, ஐந்தாவது இடம் ஆயிஷா பெற்றுள்ளார்கள். இவ்வாறு அடுத்தடுத்த இடங்களை தொடர்ந்து பெற்றுள்ள இந்த போட்டியாளர்கள் கண்டிப்பாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவதில்லை ஆனால் கடைசியாக விஜே மகேஸ்வரி மற்றும் சாந்தி குறைவான வாக்குகளை பெற்று இருக்கிறார்கள்.
அதாவது டான்ஸ் மாஸ்டர் மற்றும் சீரியல் நடிகையான சாந்தி தான் இந்த லிஸ்டில் கடைசி இடத்தை பெற்றிருக்கிறார் இவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயதானவர் எனவே நீண்ட நாள் பிக்பாஸ் வீட்டில் இருக்க அதிக வாய்ப்பு இல்லை ஏனென்றால் ரசிகர்கள் பெரும்பாலும் இளம் வயதினரை மட்டுமே விரும்பி வருகிறார்கள்.