அடுத்த கேஜிஎப் யாஷ் இவர்தான்.. வைரலாகும் பத்து தல திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிம்பு.!

simbu

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் சிம்பு தன்னுடைய சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். மேலும் நடிகராக மட்டுமல்லாமல் படங்களை இயக்குவது மற்றும் பாடகர் என பன்முகத் தன்மைகளையும் கொண்டு இருக்கிறார் இதன் காரணமாக இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் இவருடைய ஆல்பம் படங்கள் வேற அளவில் கிட் அடித்து வருகிறது.

நடிகர் சிம்பு சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் அதிகமாக உடல் எடையை உயர்த்தியதால் இவருடைய நடிப்பில் வெளிவரும் சில திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியினை சந்தித்து வந்தது. மேலும் இவருடைய நடவடிக்கை சரியில்லை எனவும் விமர்சித்து வந்தார்கள் இதன் காரணமாக இவரை வைத்து படத்தை இயக்க எந்த ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் முன் வரவில்லை.

எனவே தற்பொழுது இந்த அனைத்து சர்ச்சைகளையும் மாநாடு திரைப்படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவருடைய வித்தியாசமான நடிப்பு மற்றும் கதாபாத்திரம் ஆகியவை ரசிகர்களை கவர்ந்தது இதனை தொடர்ந்து சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் பெரிதாக இதுவரையிலும் நடிகர் சிம்பு கிராமத்து பையன் கதாபாத்திரத்தில் நடித்து இல்லை என்பதனால் பலரும் இது இந்த படம் இவருக்கு பெரிதாக செட் ஆகாது என கூறி வந்தார்கள்.

simbu 1
simbu 1

ஆனால் கிராமத்து பையனாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவர் முகத்திலும் கரியை பூசினார்.  இப்படிப்பட்ட நிலையில் பலரும் சிம்புவை விமர்சித்து வந்த நிலையில் அனைத்து விமர்சனங்களுக்கும் இந்த படங்களின் மூலம் சிம்பு பதிலடி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் பத்து தலை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

simbu 2
simbu 2

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடக்காமல் இருந்து வந்தது ஆனால் தற்பொழுது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது விரைவில் இந்த படத்தினை பற்றி அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் தற்பொழுது படக்குழுவினர்களுடன் நடிகர் சிம்பு இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.