பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் திரை உலகில் இதுவரை பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் இப்பொழுதும் கூட அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுக்க முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில் ஷங்கர் கையில் தெலுங்கில் ராம் சரணை வைத்து RC 15 என்னும் படத்தை எடுத்து வருகிறார்.
தமிழில் உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் தூசி தட்டி எடுத்து வருகிறார் இந்த இரண்டு படங்களையும் வெற்றி கரமாக முடித்துவிட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக பொன்னியின் செல்வன் போல ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க இருக்கிறார்.
அந்த படம் குறித்து தற்பொழுது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சில தகவல்களை கொடுத்திருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. வெள்பாரி நாவலை படமாக எடுக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்துள்ளதாகவும் அது பெரிய பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் இதற்கான ஸ்கிரிப்ட் ரைட்டிங் வேலைகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.
பட்ஜெட் அதிகம் என்பதால் அதற்குள் RC 15, இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் இதை தொடர்ந்து அடுத்ததாக வேள்பாரி நாவல் தான் ஷங்கர் எடுக்க இருக்கிறார் என கார்த்திக் சுப்புராஜ் உறுதியாக கூறியுள்ளார்.
அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர் சங்கர் சூர்யா அல்லது கே ஜி எஃப் யாஷ் ஆகிய இருவரில் ஏதேனும் ஒருவரை நடிக்க வைப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது மறுபக்கம் இந்த படத்தில் சூர்யாவும், யாஷும் சேர்ந்து கூட இந்த படத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளிப்படுகின்றன ஆனால் எது எப்படியோ வேள்பாரி நாவல் ஒரு படமாக உருவாகுவது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.