எஸ்ஏசி, ராதிகா இணைந்து நடிக்கும் புதிய சீரியல் இதுதான்.! ஜீ தமிழின் இரண்டு ஹீரோயின்களை விலைக்கு வாங்கிய விஜய் டிவி..

rathika
rathika

தற்பொழுது தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் இந்த மூன்று தொலைக்காட்சிகளும் தான் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது. மேலும் இந்த மூன்று தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வரும் நிலையில் தொடர்ந்து ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக நல்ல கதை அம்சமுள்ள சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிரபல இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் இருவரும் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கின்றனர் இது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

இவர்களுடைய கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த சீரியலில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஜீ தமிழில் நடித்து வந்த இரண்டு கதாநாயகிகளை விஜய் டிவி அதிக சம்பளத்தை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  அந்த வகையில் ஜீ தமிழில் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த பூவே பூச்சூடவா சீரியலின் மூலம் பட்டிக்தொட்டி எங்கும் பிரபலமான ரேஷ்மா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் ஹீரோயின் அஸ்வினி இருவரும் இணைந்து தான் விஜய் டிவியின் புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார்கள்.

இவர்கள் நடிக்க இருக்கும் இந்த சீரியலுக்கு ‘கிழக்கு வாசல்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராதிகா, எஸ்ஏ சந்திரசேகர், ரேஷ்மா, அஸ்வினி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் நிலையில் மேலும் எந்தெந்த பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரியல் சூப்பர் ஹிட் அடித்த விசுவின் சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்துடைய கதையை வைத்து தான் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் நடிகை ராதிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியலுக்கு பிறகு முதன்முறையாக விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலில் நடிக்க இருக்கிறார் இவரை அடுத்து சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுக்கும் எஸ்ஏ சந்திரசேகரின் நடிப்பை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.