ஐபிஎல் 15 வது சீசன் அடுத்த வருடம் கோலாகலமாக நடத்த இருக்கிறது இதனால் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மீதி வீரர்களை விடுவிக்க வேண்டும் என பிசிசிஐ கேட்டு கொண்டது. இத்தனை அடுத்து ஒவ்வொரு அணிக்கும் தனக்கு தேவையான நான்கு வீரர்கள் அல்லது மூன்று வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மீதியை வீரர்களை விடுவித்துள்ளது.
அந்தவகையில் ஆர்சிபி அணி முதலாவதாக விராட் கோலியை 15 கோடி கொடுத்து முதலாவதாக தன்வசப்படுத்திக் கொண்டது. அடுத்ததாக மேக்ஸ்வேல் 11 கோடி, அடுத்ததாக முகமது சிராஜ் 7 கோடி கொடுத்து ஆகிய மூன்று வீரர்களை மட்டுமே தன் வசப்படுத்திக் கொண்டது அடுத்த வருடம் ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட கோலி செயல் படமாட்டார் என்பதை ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை..
அடுத்து புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க ஆர்சிபி அணியை ஒரு வீரரை தேடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த வீரரை ஒருவழியாக கண்டுபிடித்து விட்டது. கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த மனிஷ் பாண்டேவை ஆர்சிபி அணி குறி வைத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் – லில் மணிஷ் பாண்டே ஆட்டம் பெரிய அளவு ஜொலிக்க படவில்லை என்றாலும் புது அணிக்கு திரும்பும் போது நல்ல பார்மில் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது அந்த வகையில் ஆர்சிபி அணி பாண்டேவை ஏலத்தில் எடுப்பதோடு மட்டுமல்லாமல் கேப்டன் பொறுப்பையும் கொடுத்து அழகு பார்க்க இருக்கிறது.
ஆர்சிபி அணிக்கு கோலி இதுவரை கேப்டனாக இருந்து வந்துள்ளார். வருகின்ற புதிய கேப்டனும் கோலியின் பேச்சைக் கேட்டு நடக்க கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்பதால் மனிஷ் பாண்டேவை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.