பல பெயர்களை கொடுத்தார்கள் நான் தேர்ந்தெடுத்தது இந்தப் பெயர்தான்.!தனது பெயருக்கான காரணத்தை கூறிய நயன்தாரா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. சினிமா உலகில் ஹீரோயினாக சுமார் 14 வருடங்களாக நிலைத்து நின்று வருகிறார். தமிழ் சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா தமிழ் சினிமாவில் மட்டும் தனது திறமையை வெளிக்காட்டாமல் பிற மொழிகளான தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வருகிறார்.நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். கல்லூரியில் படிக்கும் போதே பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். அதன்பின் சத்தியன் என்ற இயக்குனர் சந்தித்து மனசினகாரே திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனைதொடர்ந்து நடிப்பைத் தொடர்ந்தார் நயன்தாரா. அதன்பின் மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதனை சரியாக பயன்படுத்தி நயன்தாரா தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள மிக வசதியாக அமைந்தது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தார். இது நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் இரண்டாவது படமாகும்.பின் நயன்தாரா அவர்கள் அஜித், விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருமாறினார். நயன்தாராவுக்கு இந்த பெயர் எப்படி வந்தது என பல பிரபலங்களை தாண்டி தற்போது ரசிகர்கள் மனதிலும் எழ தொடங்கியது.

 

இந்த நிலையில் நயன்தாரா பேட்டி ஒன்றில் பேசுகையில் என்னுடைய படத்தின் முதல் இயக்குனர்தான் எனக்கு வேறு பெயரை வைக்கவேண்டும் என்று சொன்னார். அப்போது 30 பெயர்களை எனக்கு தேர்ந்தெடுத்து ஒரு லிஸ்ட் ஒன்றை என்னிடம் கொடுத்தார். அதில் எனக்கு இந்த பெயர்தான் பிடித்திருந்தது என்று அவரிடம் சொன்னேன். அவரும், நானும் இந்த பெயரைத்தான் தேர்ந்தெடுத்தேன் என்று என்னிடம் சொன்னார் என்று கூறியுள்ளார் நயன்தாரா.