எனக்கு பயத்தை காட்டிய திரைப்படம் இதுதான் – இயக்குனர் சுந்தர். சி வெளிப்படை.! வியந்த ரசிகர்கள்.

sundar.-c
sundar.-c

தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக வெற்றிகண்டவர் சுந்தர் சி இவர் சினிமா உலகில் ஆரம்பத்தில் அஜித் ரஜினி கமல் போன்ற டாப் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டினார் இப்படி ஓடிக் கொண்டிருந்த சுந்தர் சி நடிகை குஷ்புவை ஒரு கட்டத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு திடீரென நடிக்கவும் தொடங்கினார் சுந்தர் சி தனது படங்களை இயக்கி அதில் நடித்து வெற்றி காண ஆரம்பித்தார் தொடர்ந்து இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்கி நடித்த அரண்மனை சீரிஸ் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கவும் செய்கிறார். அந்த வகையில் தற்போது பட்டாம்பூச்சி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வெகு விரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் சுந்தர் சி.

என் சினிமா வாழ்க்கையில் எனக்கு ரொம்ப பயத்தை காட்டிய படம் என்றால் அது அரண்மனை 2 தான் என கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியது மறுநாள் படம் ரிலீசாக வேண்டியது அன்று இரவு 11:30 மணிக்கு நான் இந்த படத்தை பார்த்தேன். கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பாடல் வரும்.

அந்த காட்சியில் கலர்ஸ் அதிகமாகி பாடல் கம்மியாக கேட்டது எனக்கு heart நின்னுடும் போல இருந்தது. அனைத்தும் சிறப்பாக வந்து கடைசியில் இதுபோன்ற தவறு நடந்தால் படத்தின் மொத்த கதையுமே கெடுத்துவிடும் என்பது போல் அமைந்து விடும் என அந்தப் பேட்டியில் சுந்தர் சி கூறியிருந்தார்.