சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் 40 ஆண்டுகளை தாண்டி இப்பொழுதும் ஜொலிக்கிறார் காரணம் தொடர்ந்து இவரது திரைப்படங்கள் வெற்றி பெறுவதே காரணம் என கூறப்படுகிறது. மேலும் ரஜினி தொடர்ந்து ஆக்டிவாக இருந்துகொண்டு இளம் நடிகர்களுக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூலில் புதிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க தற்போது ரெடியாக இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து புதிய படங்களை பார்த்து கண்டுகளித்து வருகிறார்.
ரஜினியை கவர்கின்ற படங்கள் மற்றும் நடிகர்களையும் புகழ்ந்து தள்ளுவது அவரது ஸ்டைல் அண்மையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து தயாரித்த திரைப்படம் ராக்கி இந்த திரைப்படமும் மக்களை வெகுவாக கவர்ந்தது இதனை ரஜினியும் பார்த்துவிட்டு படத்தின் ஹீரோ ரவி மற்றும் பாரதிராஜா ஆகியோர்களை பாராட்டித் தள்ளினர்.
மேலும் இப்படி ஒரு படத்தை தயாரிப்பதற்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோரையும் புகழ்ந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அண்மையில் உலக அளவில் வெளியாகி வெற்றியை கண்டு வரும் திரைப்படம் 83 இந்த படம் முழுக்க முழுக்க கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது 1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று அசத்தியது.
அதை திரைப்படமாக எடுக்கப்பட்டது இதில் ரன்பீர் கபூர் மற்றும் ஜீவா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தனர். 1983 இல் நடந்த உலக கோப்பையை மையமாக வைத்து இந்த படம் அதை அப்படியே ஞாபகத்திற்கு கொண்டு வரும்படி இந்த படத்தை எடுத்து இருந்தனர்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை புகழ்ந்து பாராட்டியதோடு இப்படி ஒரு படத்தில் நடித்ததற்காக ஜீவா மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரை பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.
#83TheMovie wow 👏🏻👏🏻 what a movie… magnificent!!! Many congratulations to the producers @kabirkhankk @therealkapildev @RanveerOfficial @JiivaOfficial and all the cast and crew …
— Rajinikanth (@rajinikanth) December 28, 2021