இந்திய அணியில் நல்ல வீரர்கள் இருந்தாலும் சமீபகாலமாக எந்த ஒரு கோப்பையையும் கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது ஆசிய கோப்பை, 20 ஓவர் கோப்பை, நியூசிலாந்து உடனான ஒரு நாள் தொடர் என அனைத்திலும் தோல்வியை தழுவியது இதிலிருந்து மீண்டு வர இந்திய அணியும் பல முயற்சிகளை எடுத்துள்ளது தற்பொழுது இந்திய அணி பங்களாதேஷ் உடனான மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
அதில் முதலாவதாக நேற்று முதல் ஒருநாள் போட்டி மிர்ப்பூரில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை எடுத்து களம் கண்ட இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா, ஷிகார் தாவன் ஆகியவர்கள் ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் மறுபக்கம் விக்கெட்டுகள் சரிய தொடங்கியது.
ரோகித் சர்மா 21, தவான் 7, விராட் கோலி 9 என அடுத்தடுத்து விக்கெட் கொடுத்தனர் இதனால் இந்திய அணி தடுமாறியது ஆனாலும் மிட்டிலாடரில் கே எல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 71 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்தவராக அந்த போட்டியில் ராகுல் தான் இருந்தார் ஒட்டுமொத்தமாக 41.2 ஓவரில் 186 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது இந்தியா.
இதனை எடுத்து களம் கண்ட பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் விக்கெட்டை கொடுத்தாலும் அதன் பின் சுதாகரித்து நிதானமாக விளையாண்டது இருப்பினும் சீரான இடங்கள் விக்கெட் விழுந்தன இருப்பினும் கடைசியாக mehidy hasan மற்றும் mustafizur rahman இருவரும் இணைந்து நல்ல ஆட்டத்தை வெற்றிப்படுத்தி வெற்றியை ருசித்தனர் தோல்விக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா சொன்னது..
186 ரன்கள் என்பது போதுமானதாக இல்லை நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். அதன் காரணமாக சரியான நேரத்தில் விக்கெட்டைகளை எடுத்திருந்தோம் இன்னமும் 20 அல்லது 25 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறினார் மேலும் பேசிய ரோஹித் ஷர்மா இது போன்ற சூழ்நிலைகளில் நாங்கள் நிறைய விளையாடி இருக்கிறோம் தோற்றதற்கு சாக்குபோக்கு எல்லாம் சொல்ல முடியாது என கூறி முடித்தார்.