தொடர் தோல்வியை சந்தித்த அஜித் – முக்கிய காரணம் இந்த இயக்குனர்கள் தான்.? பல வருடம் கழித்து வரும் தகவல்.!

AJITH
AJITH

சினிமா உலகில் ஒரு ஹீரோவுக்கு வெற்றி  படம் கிடைக்க வேண்டும் என்றால்அவரைத் தாண்டி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சரியாக இருந்தால் மட்டுமே அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும். இதனால் ஒரு ஹீரோ இயக்குனரையும், தயாரிப்பாளரையும் சரியாக தேர்வு செய்ய வேண்டியது முக்கியமான விஷயம்.

அதை சரியாக செய்ய தவறி விட்டால் படம் தோல்வியை சந்திக்க நேரிடும். எடுத்துக்காட்டு நடிகர் அஜித்குமார் ஆரம்ப காலகட்டங்களில் படத்தின் கதையை கேட்காமலேயே படத்தில் நடிப்பதால் அவரது படங்கள் ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்து உள்ளன குறிப்பாக அஜித்தின் ஆரம்ப காலத்தில் நிறைய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது.

எதனால் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகின்றன ஆரம்பத்தில் அஜித் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி உடன் நெருங்கிய நட்பில் இருந்தார் அதனால் அந்த தயாரிப்பாளருடன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்தார். அஜித், கேஎஸ் ரவிக்குமார் இணைந்து “வில்லன்” என்ற திரைப்படத்தில் பணியாற்றினார். இந்தப் படம் பெரும் 91 நாட்களில் படம் எடுக்கப்பட்டது.

அந்த படத்தை சக்கரவர்த்தி தயாரித்து இருந்தார். படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது அதன்பின் சக்கரவர்த்தி அனுபவம் வாய்ந்த இயக்குனருடன் கைகோர்த்தால் நல்ல லாபத்தை எடுக்கலாம் என நினைத்து முடிவெடுத்தார் இதனால் அஜித்தின் அடுத்தடுத்த படங்களை அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் எடுத்தனர்.

அந்த வகையில் லிங்குசாமியின் (ஜி), என் மகாராஜன் (ஆஞ்சநேயா), ஷாஜி கைலாஷ் (ஜனா), பி வாசு (பரமசிவன்) ஆகிய படங்களை முன்னணி இயக்குனர்கள் இயக்கினாலும் அந்த படங்கள் பெரும் தோல்வியைத் தழுவின கே எஸ் ரவிகுமார் தொடர்ந்து அஜித்தை வைத்து அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் எடுத்த படங்கள் பெரும்பாலும் தோல்வி படங்களாகவே மாறியது.