இந்திய அணி நியூசிலாந்து எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெயிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 372 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
இதனால் கோலி மற்றும் இந்திய வீரர்கள் செம உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த வெற்றியை இந்திய ரசிகர்களையும் உற்சாகம் அடைய செய்துள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து அணியுடனான வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியது.
மீண்டும் வெற்றிப் பாதைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது இந்த போட்டியில் நாங்கள் மிக சிறப்பாக விளையாட்டை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை காண்பித்து உள்ளோம். NZ அணியும் கடுமையான போராட்டத்தின் மூலம் எங்குளுக்கு நெருக்கடி கொடுத்து.
இந்த வெற்றிக்கு முக்கிய பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம் மேலும் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே ஆசை. எதிர்வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை ஆனால் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரை வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என விராட் கோலி பேசியுள்ளார்.
இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் சமீப காலமாக நிகழ்ந்து வருகின்றன ஒருநாள் மற்றும் 20 ஓவர் பார்மட்டில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட டெஸ்ட் போட்டியில் மற்றும் விராட் கோலி கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்ற தகவல் தற்போது சமூக வலைதள பக்கத்தில் உலா வருகின்றன.