“ஐஸ்வர்யா ரஜினி” வீட்டில் திருட முக்கிய காரணமே இதுதான்.? விசாரணையில் உண்மையை உலறிய வேலைக்காரி ஈஸ்வரி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்

aishwarya-rajini
aishwarya-rajini

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரை தொடர்ந்து அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியும் இயக்குனராகவும், பின்னணி பாடகர் ஆகவும் ஜொலிக்கிறார் தற்பொழுது கூட விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் வைத்து லால் சலாம் என்னும் படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகையை திருடி உள்ளதாகவும் தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர் தான் இதற்கு காரணம் என போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது இந்த புகாரின் பெயரில் ரஜினி வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்பவரை கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து ஈஸ்வரியின் வீட்டில் இருந்து 100 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி, 30 கிராம் வைரமும் பறிமுதல் செய்யப்பட்டது  ஐஸ்வர்யா ரஜினி கூறியதை விட அதிகமான நகை ஈஸ்வரி வீட்டில் இருந்தது சந்தேகம் இருந்தது இது குறித்து ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்திய உள்ளனர் ஐஸ்வர்யா வீடு மட்டும் இன்றி ரஜினிகாந்த், தனுஷ் வீட்டில் கூட ஈஸ்வரி வேலை செய்து வந்துள்ளாராம்.

இதனால் தனுஷ்,  ரஜினி வீட்டிலும் இவர் திருடி உள்ளார் என்ற கண்ணோட்டத்தில் விசாரணையை ஈஸ்வர்யிடம் நடத்தி உள்ளனர் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. ஐஸ்வர்யா வீட்டில் ஏன் திருடினேன் என்றால் ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் மாடு போல் உழைத்தேன் அவர் சொல்லும் அனைத்து வேலையும் செய்து கொடுப்பேன். அவருக்கு நல்ல வசதி இருந்தும் எனக்கு மாதம் 30,000 ரூபாய் மட்டும் தான் சம்பளமாக தந்தார்.

அந்த காசு ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருக்குமா? அதனால் தான் திருட துவங்கினேன் முதலில் சின்ன சின்னதாக திருட ஆரம்பித்தேன். என்ன கண்டுபிடிக்கவில்லை இதனால் நகையையும் திருடினேன் என்னை கண்டுபிடிக்காததால் மேலும் மேலும் அந்த திருட்டு தொடர்ந்தது இரு அடுக்குமாடி வீட்டையும் வாங்கினேன்.  இன்னும் கொஞ்ச நாட்கள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்திருந்தால் நான் இன்னமும் திருடி இருப்பேன் என ஈஸ்வரி கூறியுள்ளார்.

aishwarya-rajini
aishwarya-rajini