சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோ அவதாரம் எடுத்தவர் நடிகர் சிம்பு தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வெற்றி கண்டு வந்த இவர் திடீரென இயக்குனராகவும், பாடகராகவும் இசையமைப்பாளராகவும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து திரை உலகில் வெற்றியை மட்டுமே கண்டு வந்த இவரது படங்கள் திடீரென தோல்வியை சந்திக்க ஆரம்பித்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதனால் இவருடைய உடல் எடை அதிகரித்தது மேலும் கமிட் ஆன படங்களிலும் சரியாக நடிக்காமல் இருந்தார் இதனால் சிம்புவின் சினிமா மார்க்கெட் குளோஸ் என பலரும் சொல்லி வந்தனர் ஆனால் திடீரென உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் கம் பேக் கொடுத்தார் அன்றிலிருந்து இன்று வரை படத்தின் கதைக்கு ஏற்ப உடல் எடையை ஏற்றி இறக்கி நடித்து வருகிறார்.
மேலும் இவர் நடிக்கும் படங்களும் இப்பொழுது வெற்றியை பெறுகின்றன அந்த வகையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து பத்து தல திரைப்படத்திலும் சூப்பராக நடித்து முடித்துள்ளார் படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆகிறது அதற்க்கு முன்பாக இந்த படத்தின் டீசர் ட்ரைலர் போன்றவை வெளிவந்த நிலையில் அண்மையில் ஆடியோ லாஞ்சில் சிம்பு தன்னுடைய சினிமா பயணம் குறித்தும் பத்து தல திரைப்படம் குறித்தும் பேசினார்.
அப்பொழுது அவர் சொல்லுகையில் எனக்கு பிரச்சனை கொடுக்க நிறைய பேர் இருக்கின்றனர் ஆனால் தூங்கி விட யாரும் இல்லை என கூறினார் தொடர்ந்து பேசி வந்த இவர் சினிமாவில் கம் பேக் கொடுத்ததற்கான காரணத்தை சொல்லி உள்ளார். செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நான் ஓடும் காட்சி படமாக்கப்பட்டது.
அப்பொழுது என்னால் ஓடவே முடியவில்லை சூட்டிங் முடிந்த பிறகு அழுதேன் ஆனால் அடுத்து திடீரென மாநாடு திரைப்படத்தில் ஓடினேன் அப்பொழுதும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்பதான் ஒன்னு தோணுச்சு கண்டிப்பா உன்னால வர முடியும் வந்துருவ நீ என தன்னை தானே பேசிக் கொண்டேன் இதுதான் தன்னுடைய சினிமா பயணத்தில் கம்பேக் கொடுப்பதற்கான காரணம் என கூறினார்.