“ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் நடிக்க முக்கிய காரணமே இதுதான்..! நடிகர் சதீஷ் பேச்சு..

sathish
sathish

சன்னி லியோன் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர். இந்தியில் முதலில் ஐட்டம் டான்ஸ் நடனமாடி பிறகு படிப்படியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து  பிரபலமடைந்தார் தற்போது ஹிந்தி சினிமாவையும் தாண்டி பிறமொழிகளிலும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் அந்த வகையில் தமிழில் தற்போது வீரமாதேவி, ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதில் முதலாவதாக ஓ மை கொஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் நடிகை சன்னி லியோனுடன் கைகோர்த்து நடிகர் சதீஷ் குக் வித் கோமாளி புகழ், தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி. பி. முத்து மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் நடிந்திருக்கின்றனர்.

இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தை யுவன் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தை வாவும் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீரசக்தி மற்றும் கே சசிகுமார் இணைந்து தயாரித்து உள்ளனர் இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு ஒரு படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் சதீஷ் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் இந்த படத்தின் கதையை இயக்குனர் கூறும் போது அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது அதில் சன்னிலியோன் நடிக்கிறார் என்றவுடன் நான் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன்.

சன்னி லியோன் ஒரு சிறந்த மனிதநேயமிக்க நபர் அவரை நெருங்கவே நாங்கள் தயங்கி கொண்டு இருந்தோம் ஆனால் அவர் இலகுவாக மிக இயல்பாக எங்களிடம் பழகினார் அவர் இந்த படத்தில் மிகப்பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார் சிறப்பாக நடித்துள்ளார் அனைவரும் கடின உழைப்பை கொடுத்தே இந்த படத்தை உருவாக்கி உள்ளோம் இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என என தெரிவித்தார்.