குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த பலரும் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்துகின்றனர். அந்த வகையில் மலையாளத்தில் ஒன்னு, ரெண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா தமிழில் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.
அதுவும் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து முதல் படத்திலேயே அஜித்துக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்ததால் அடுத்ததாக விசுவாசம் திரைப்படத்திலேயேயும் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். விசுவாசம் படத்திற்கு பிறகு அனிகாவுக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் குவிந்தது மேலும் ரசிகர்களும் அதிகம் உருவாகினர்.
இதனால் அனிகா படங்களில் ஒரு பக்கம் நடித்தாலும் மறுபக்கம் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தார். அதுவும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நயன்தாராவுக்கு இணையாக இருப்பதால் அடுத்த நயந்தாரா நீங்கள் தான் எனக் கூறி கமெண்ட் அடித்து வந்தனர். இப்படி இருக்கின்ற நிலையில் தான் அதிர்ஷ்டம் அடித்தது மலையாளத்தில் ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கத்தில் “ஓ மை டார்லிங்” திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடிக்கும் வாய்ப்பை அவர் கைப்பற்றினார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது அதில் ஏகப்பட்ட முத்த காட்சிகள் இருந்தன. அனிகா ரசிகர்களுக்கு தூக்கி வாரி போட்டாலும் இந்த ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனிகா “ஓ மை டார்லிங்” திரைப்படத்தில் முத்த காட்சிகளில் நடித்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது.. ஓ மை டார்லிங் முழுநீள காதல் படம்..
அதில் முத்த காட்சிகள் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று கதை சொல்லும் பொழுது இந்த காட்சிக்கான முக்கியத்துவத்தையும் இயக்குனர் சொல்லி இருந்தார் கதைக்கு தேவைப்பட்டதால் தான் அதில் நடித்தேன். அந்த காட்சியில் துளி கூட ஆபாசம் இருக்காது படம் பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு அது புரியும் என கூறியுள்ளார்.