சினிமாவால் நான் இழந்த வாழ்க்கை இதுதான் – நச்சின்னு பதில் அள்ளித்த விஜய்.! வீடியோவை திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர்கள்.

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66 வது திரைப்படத்தில் நடிக்க வருகிறார். இந்த படத்திற்கு படக்குழு வாரிசு என பெயர் செய்து உள்ளது இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார் வித்தியாசமான கதை களத்தில் இந்தப் படத்தை வம்சி இயக்குகிறார் .

முதல்கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீகாந்த், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், குஷ்பு, பிரபு, சரத்குமார், ஷாம் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

வாரிசு படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிரடியாக அறிவித்தது தொடர்ந்து இந்த படத்தில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து அசத்துகின்றன. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தளபதி விஜய்.

தமிழ் சினிமா உலகில் அண்மைக்காலமாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வரும் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தனது 67 வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இதனால் விஜய்யின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் சில வருடங்களுக்கு முன் ரசிகர்களுடன் அமர்ந்து நேர்காணல் ஒன்றில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்பொழுது ஒரு ரசிகை சினிமாவிற்கு நீங்கள் வந்ததால் உங்கள் வாழ்க்கையில் என்ன விஷயத்தை இழந்தீர்கள் என கேட்டுள்ளார் அதற்கு விஜய் சினிமாவிற்கு வந்ததால் படிப்பை இழந்தேன் மேலும் என் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் போய்விட்டது அப்படியெல்லாம் சொல்வேன் என்று நினைத்தீர்களா அது எதுவுமே கிடையாது.  வேற மாதிரி பதில் கொடுத்துள்ளார்  விஜய். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.