தளபதி விஜய்யிடம் நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான் – இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மாஸ் பேச்சு.!

vijay-
vijay-

தமிழ் சினிமா உலகில் பன்முகத்தன்மை கொண்ட பிரபலங்கள் எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுவார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தாலும் பாடகராகவும் நடிகராகவும் தன்னை வளர்த்துக்கொண்டு பன்முக திறமையோடு சினிமா உலகில் வலம் வருபவர் ஜி பி பிரகாஷ்.

தொடர்ந்து ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் இசையில் ரசிகர்களை கட்டி இழுத்தும் வருகிறார். இதனால் ஜி வி பிரகாஷின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜிவி பிரகாஷ் சூரறை போற்று படத்திற்கு சூப்பராக இசையமைத்து தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் ரஜினி போன்ற பல்வேறு டாப் ஹீரோகள் படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். விஜய் உடன் தலைவா படத்தில் இசையமைத்துள்ளார் இந்த படம் இதுவரை வெளிவந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவு செய்தது இதனை அடுத்து இந்த படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் விஜய் குறித்தும், படம் குறித்தும் பேசினர் அப்படி ஜிவி பிரகாஷ்ஷும்

சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்தும் இந்த படம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் விஜய் பற்றி அவர் சொன்னது விஜய் இடம் இருந்து எப்படி அனைத்து சூழ்நிலைகளிலும் அமைதியாக செயல்படுவது என்பது குறித்து கற்றுக் கொண்டேன் என விளக்கமாக கூறினார் விஜயின் ஒரே மாதிரியான மனநிலை, அவரிடம் அவரது படங்கள்..

ரிலீஸ் சமயத்தில் அவரது மனநிலை எப்படி இருக்கும் பதட்டமாக உணர்வீர்களா என்றுதான் ஒரு சமயத்தில் கேள்வி எழுப்பியதாகவும் ஆனால் விஜய் அப்படியெல்லாம் கிடையாது அதிகமாக படங்களில் நடித்து விட்டதால் படம் நன்றாக இருந்தால் ஓகே நன்றாக இல்லை என்றாலும் ஓகே என்ற மனநிலைக்கு வந்து விட்டதாக விஜய் கூறினாராம் இதை ஜிவி பிரகாஷ் விஜயுடன் கற்றுக் கொண்டதாக கூறினார்.