தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.அஜித்,விஜய்,கமல் மற்றும் ரஜினி ஆகியோர்களுக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் தான் டாப்பில் இருந்து வருகிறார்.
தல அஜித் மற்றும் விஜய் இவர்களின் காலத்தில் ஏராளமான நடிகர்கள் சினிமாவில் கலக்கி வந்தார்கள். ஆனால் அவர்களால் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களாக வலம் வர முடியவில்லை.ஆனால் இளம் நடிகராக சமீபத்தில் திரைக்கு அறிமுகமாகி தற்போது அசைக்கமுடியாத நாயகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் தான் போட்டியாளராக தனது கேரியரை தொடங்கினார். பிறகு நீண்ட காலம் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவரின் பேச்சு திறமை மற்றும் காமெடி திறமையை பார்த்து பலர் அசந்து போனார்கள்.
இதன் மூலம் இவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு தனது விடாமுயற்சியாலும்,கடின உழைப்பினாலும் தொடர்ந்து நடித்து தற்போது வெள்ளித்திரை தனது முத்திரையை பதித்து அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் ரிலீசாக உள்ளது. திரைப்படம் மே மாத விடுமுறையில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் அயலான் மற்றும் டான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்பொழுது இவர் பிரபல பிக்பாஸ் நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் போலவே இவரும் விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான்.
அது வேறு யாருமில்லை பிக்பாஸ் சீசன் 3-இல் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் கவின். இவர் தற்பொழுது சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் லிப்ட் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கவின் இருவருமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் என்பதால் மிகவும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.