தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிக ஹிட் படங்களை கொடுத்து சிறப்பாக ஓடி கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் புதிய சாதனையைப் படைகின்றன. அதுபோல 2012ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் கை கோர்த்தது தளபதி விஜய் கைகோர்த்து பணியாற்றிய திரைப்படம் “துப்பாக்கி”.
இந்த திரைப்படத்தில் விஜய் ராணுவ வீரராக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார் இந்த படம் வெளியாகி ரசிகர்களையும் தாண்டி மக்களையும் வெகுவாக கவர்ந்தது அந்த அளவிற்கு படம் சிறப்பாக இருந்தது மேலும் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்து அசத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் கேரியரில் இது ஒரு முக்கியப் படமாக அமைந்தது இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து வித்யூத் ஜமால், சத்தியன், காஜல் அகர்வால், மலையாள நடிகர் ஜெயராஜ் மற்றும் பலர் டாப் நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தனர். துப்பாக்கி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அந்த காரணத்தினால் தான் இந்த திரைப்படம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது போதாத குறைக்கு இந்த திரைப்படம் 300 நாட்கள் ஓடி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் இப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி ஆனாலும் 300 நாட்கள் ஓடியதே கிடையாது.
இப்போ உள்ள திரைப்படங்கள் 200 கோடி 250 கோடி என வசூல் செய்தாலும் அதிக நாட்கள் ஓடியது கிடையாது. மேலும் விஜயின் துப்பாக்கி திரைப்படம் வெளியாகி இதுவரை ஒன்பது வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.