Leo audio launch : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த ட்ரெய்லரில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் கொடூர வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் மிரட்டி இருந்தார்கள். அதேபோல் சாண்டி மாஸ்டர் இந்த திரைப்படத்தில் சைக்கோ கில்லார் கேரக்டரில் மிரட்டி இருக்கிறார். இப்படி ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக இருந்தது. மேலும் ட்ரெய்லர் வெளியாகி பல சாதனைகளையும் படைத்தது. மேலும் படத்திற்கு யுஏ சான்றிதழ் தணிக்கை குழு கொடுத்துள்ளது. ஏனென்றால் படத்தில் சில கெட்ட வார்த்தைகள் ஆக்ஷன் காட்சிகள் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததால் தான் யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது என பலரும் கூறினார்கள்.
லோகேஷ் படத்திலிருந்து விலகிய நயன்தாரா.! குழப்பத்தில் ராகவா லாரன்ஸ் படக்குழு..
இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பிரபல இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.அந்த பேட்டியில் பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அப்பொழுது கைதி விக்ரம் திரைப்படத்தில் பிரியாணி காட்சிகள் இருப்பது போல் லியோவிலும் இருக்கிறதா என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு ஆமாம் அந்த காட்சி இருக்கிறது எனக் கூறினார்.
மேலும் இசை வெளியீட்டு விழா பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. எதற்காக இசை வெளியீட்டு விழாவை திடீரென நிறுத்தினீர்கள் ரசிகர்கள் நாங்கள் அனைவரும் விஜய் குட்டி ஸ்டோரி கூறுவர் என எதிர்பார்ப்பில் இருந்தோம் என லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் கேள்வி கேட்டார் தொகுப்பாளனி. அதற்கு லோகேஷ் கனகராஜ் அவர்கள் நாங்கள் முதலில் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டது அனைத்தும் உண்மைதான்.
எங்கள் டீமிலேயே மொத்தம் 7000 டிக்கெட் தேவை இருந்தது அதுமட்டுமில்லாமல் வெளியில் இருந்து ஒரு 70 ஆயிரம் டிக்கெட்கள் தேவை இருந்தது. ஆனால் அந்த இடத்தில் வெறும் 7000 பேர் மட்டுமே அமர்வதற்கு இடங்கள் இருந்தது அதனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது ஆயுசுக்கும் கருப்பு தழும்பாக இருக்கும் என விஜய் கூறினார். அதேபோல் நானும் நினைத்தேன் அதனால் தான் திட்டமிட்டு ஆடியோ லான்ச் வேணாம் என முடிவு செய்தோம்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு அசம்பாவிதம் நடந்தது அதனால் தான் நாங்கள் ஆடியோ லான்ச் ஐ உடனடியாக நிறுத்தினோம் என லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக பேட்டியில் கூறியுள்ளார்.