பிக்பாஸ் சீசன் 6 தொகுப்பாளர் இவர்தான்..! வெளியான புதிய புரோமோ வீடியோ.

bigboss
bigboss

மக்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ஆவலாக எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 கூடிய விரைவில் தொடங்க உள்ளது. விஜய் டிவியில் மக்களின் பேராதரவை பெற்று சீசன் சீசன் ஆக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற சில மொழிகளிலும் பல சீசன்களை கடந்து..

வெற்றிகரமாக ஓடி வருகின்ற நிலையில் தமிழிலும் இந்த நிகழ்ச்சி பெரிதும் பிரபலம். அதற்கு முக்கிய காரணம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் வேற லெவலில் தொகுத்து வழங்கி மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளார். ஆம் கடந்த ஐந்து சீசன்களாக தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் அந்த நிகழ்ச்சியை அவ்வளவு அருமையாக கொண்டு செல்வார் கமலின் பேச்சுக்காகவே பலரும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 எப்பொழுது தொடங்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அண்மையில் பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜீவை வைத்து ஒரு ப்ரோமோ வெளியாகியது.

அதில் பிக் பாஸ் ஆறில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்த ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 6 கமலஹாசன் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கமல் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து வேட்டைக்கு ரெடியா என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமலஹாசன் தற்போது பல படங்களில் கமிட் ஆகியதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவாரா இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்கள் பலருக்கும் இருந்தது ஆனால் தற்போது இந்த புரோமோவின் மூலம் அந்த சந்தேகம் தீர்ந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 6 கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.