90 -களில் அதிகமாக வாங்கிய சம்பளமே இவ்வளவு தான்..! ஆதங்கத்தை வெளிபடுத்திய பிரபு – கார்த்தி.

karthik-
karthik-

80, 90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர்கள் விக்ரம் மற்றும் நவரச நாயகன் கார்த்தி இவர்கள் இருவரும் அப்பொழுது சினிமா உச்சத்தில் இருந்தனர். இருவரும் தனித்தனியாக நடித்து வந்தாலும் ஒரு சில கதைகளுக்காக சேர்ந்தும்  படங்களில் நடித்துள்ளனர் அந்த வகையில் 1988 ஆம் ஆண்டு முன்னணி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான படம் அக்னி நட்சத்திரம்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருந்தது இந்த படம் அப்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி கண்டது இந்தப் படத்தில் நடிகர் பிரபு மற்றும் நடிகர் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன் பின் இருவரும் பல்வேறு படங்களில் இணைந்து நடித்தனர்.

அதற்கு ஏற்றார் போல சம்பளத்தையும் அதிகமாக வாங்கி அசத்தினர் இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருந்ததால் இவர்கள் ஒரு படத்திற்கும் சுமார் 30 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளனர். 90 களில் அப்பொழுது 30 லட்சம் என்பது இப்பொழுது கோடிகளுக்கு சமம் என சொல்லப்படுகிறது.

மேலும் ஒரு சில கவுரவ வேடத்தில் படங்களில் நடிக்கும் போது காசே வாங்காமலும் நடித்துள்ளனராம். இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருந்தனர் ஆனால் தற்பொழுது காலம் மாறிப் போய்விட்டது. இப்போதெல்லாம்  ஒவ்வொரு நடிகரும் படத்தில் கமிட் ஆவதற்கு முன்பாகவே எவ்வளவு சம்பளம் தருவீர்கள் என்று தான் கேட்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு படம் ஹிட் அடிக்கும் போதும் தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்கின்றனர். அவர்கள் கேட்கும் சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் பாதியை கேட்பதால் படத்தின் தரம் குறையும் மேலும் இதுபோன்று கேட்டுக் கொண்டே இருந்தால் சினிமா அழிந்துவிடும் என பழைய நடிகர்கள் ரொம்ப ஆதங்கப்பட்டு போகின்றனர். இப்படியே போனால் தமிழ் சினிமா கேள்வி குறியில் முடிந்து விடும் எனவும் கூறிவருகின்றனாராம்.