தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாகவும் டாப் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெகா ஹிட்டடித்த திரைப்படம்தான் அண்ணாத்த இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இவர் தங்கையாக நடித்து இருப்பார் மேலும் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் செல்வராகவன் நடிப்பில் உருவாகிவரும் சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் இத் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கிலும் இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது அந்த வகையில் தளபதி 66 திரைப்படத்தில் கூட கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தற்போது கரடுமுரடான இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இவ்வாறு வெளிவந்த தகவலின்படி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமில்லாமல் கண்டிப்பாக இத்திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக பாலா இயக்கத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் இயக்கும் திரைப் படத்தில் கதாநாயகி மற்றும் கதாநாயகனுக்கு கொடுக்கும் கதாபாத்திரம் அந்த அளவிற்கு இருக்கும் என்பதுதான் உண்மை.