2022 – ல் அதிக தோல்வி படங்களை கொடுத்த ஹீரோ இவர்தான் – பரபரப்பை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

blue sattai
blue sattai

Youtube வந்ததும் போதும் பலரும் தனது திறமையை பயன்படுத்தி காசு பார்க்கின்றனர் ஒரு சிலரோ படங்களை விமர்சித்து அதன் மூலம் காசு சம்பாதிக்கிறார்கள்.  பெரும்பாலும் படத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து அதை விமர்சிப்பது அல்லது படத்தில் என்ன பிளஸ் என சொல்லி அசத்துவார்கள்.

ஆனால் ஒரு சிலரோ படத்தையும் கழுவி ஊற்றுவார்கள். மேலும் அதில் நடித்த நடிகர் நடிகைகளையும் கழுவி ஊற்றுவார்கள் அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் என்ற பெயரில் படத்தை விமர்சிப்பார் அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் குறைகளை கண்டறிந்து அதைப் பற்றியும் பேசி வருகிறார்.

இவர் வெளிப்படையாக சில விஷயங்கள் பேசுவது அந்த நடிகர்களின் ரசிகர்களை கோபமடைய செய்கிறது. இப்போது கூட அஜித்தை வம்புக்கு இழுத்து உள்ளார். அதுவே முடிந்த பாடு இல்லை அதற்கு இடையே இன்னொரு பிரச்சனையையும் அவர் ஆரம்பித்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இந்த ஆண்டில் அதிக பிளாப் படங்களை கொடுத்த நடிகர்கள் பட்டியலை வெளியிட்டு..

அதில் அசோக் செல்வன் அதிக பிளாப் படங்களை கொடுத்தார் என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருந்தார்.  இது பூதாகரமாக வெடித்தது. இதற்கு ரசிகர்கள் சில எதிர் கருத்துக்களை கூறி வந்தனர்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் அசோக் செல்வன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவை போட்டு அசத்தி இருக்கிறார்

அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. குரைக்கும் நாயை கண்டு கொள்ளாமல் முன்னேறி செல்வோம் என அசோக் செல்வன் போட்டுள்ளார். இதை பலரும் வரவேற்றுள்ளனர் மேலும் ஒரு சிலர் உங்களுக்கு மீண்டும் ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுப்பார் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.