இந்த ஹீரோ தான் எனக்கு வேண்டும் ஒத்த காலில் நின்ற சமந்தா.? கொக்கி போட்டு தூக்கிய இயக்குனர்.? படம் ஹிட் அடிக்குமா..

samantha
samantha

நடிகை சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து வரும் சமந்தாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இது ஒரு பக்கமிருக்க தமிழ் தெலுங்கு சினிமாவையும் தாண்டி வெப் சீரிஸ் பக்கமும் தற்பொழுது அறிமுகமாகி பட்டைய கிளப்பி கொண்டு வருகிறார். அந்த வகையில் தே ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரியஸ் தற்பொழுது தயாராகியுள்ளது.

இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தாலும் அரசியல் பிரமுகர்களை பெரிதும் கடுப்பேற்றி உள்ளது சமீபத்தில் இதற்கு பதிலடி கொடுத்த சமந்தா பொறுமையாக இருங்கள் காத்து இருங்கள் என கூறி ரீட்வீட் போட்டதோடு இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் சினிமாவில் தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் சிறப்பாக வலம் வர அவர் ரெடியாக இருக்கிறார் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்கள் கொடுத்து வந்த நிலையில் தற்போது இவர் பெரிதும் எதிர்பார்ப்பது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் திரைப்படம்தான் கையில் இருக்கிறது.

இந்த இரண்டு திரைப்படங்கள் தொடர் ஹிட் ஹிட் கொடுத்தால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்படுகிறது ஏனென்றால் ஏற்கனவே தெலுங்கு தமிழில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்ற நிலையில் இந்த அதை சரியாக பயன்படுத்தி ஹிட் கொடுத்தால் மேலும் தனக்கான ரசிகர்கள் பலத்தை மென்மேலும் உருவாக முடியும் கணக்கு போட்டு உள்ளார்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்த படத்தில் தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து சமந்தா புதிய படத்தில் நடிக்க உள்ளார். சமந்தா ஏற்கனவே நாக சைதன்யாவுடன் இணைந்து மஜிலி,  ஆட்டோ நகர் சூர்யா மனம் போன்ற பல்வேறு சூப்பர் சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் பங்கர் ராஜு என்ற திரைப்படத்தில் நாக சைதன்யாவும், சமந்தாவும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இதில் முக்கிய வேடங்களில் நாகார்ஜுனா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பட்டையைக்கிளப்பும் ரெடியாக இருக்கின்றனர்