திரை உலகில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்து கொண்டு வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகின்றனர் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவர்களை போலவே தற்போது இயக்குனர்களும் அதை செய்கின்றனர் அந்த வகையில் பா. ரஞ்சித் அமைதியாக இருந்து கொண்டு டாப் நடிகர் படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.
அந்த வகையில் ரஜினி, கார்த்தி ஆகியோரை தொடர்ந்து தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்னும் திரைப்படத்தை எடுத்து அசத்தினார் இந்த திரைப்படம் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வெற்றி கண்டு வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து அவர் எந்த திரைப்படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் ரஜினிக்கு முன்பாகவே நடிப்புக்கு பேர்போன நடிகர் விக்ரமுக்கு ஒரு கதையை சொல்லி ஓகே செய்து இருந்தார் ஆனால் அதற்கு முன்பாகவே ரஜினியின் கபாலி, காலா ஆகிய இரண்டு திரைப்படங்களை எடுக்கப் போனதால் அந்த திரைப்படம் அப்படியே டிராப் ஆகி இருந்தன.
அப்பொழுது விக்ரமும் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதால் அது நடக்க முடியாமல் போனது. பா ரஞ்சித் தற்போது ஒரு காதல் படத்தை எடுக்கிறார் அதை எடுத்து முடித்து விட்டு அடுத்ததாக விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை எடுப்பார் என தெரியவருகிறது.
மேலும் தற்போது விக்ரமும் பொன்னியின் செல்வன், சீயான் 60, கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இவரும் இந்த திரைப்படத்தை முடித்து விட்டால் இருவரும் அடுத்த படத்தில் இணைவதற்கு சரியான நேரமாக இருக்கும் என கூறப்படுகிறது இதனால் அவர் விக்ரமை வைத்து எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.