தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள் இயக்குவது மட்டுமில்லாமல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் செல்வராகவன் நடிப்பது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது மட்டுமில்லாமல் முதன் முதலாக இவர் விஜயுடன் இணைவது ஒரு அதிசயமான செயலாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பது மட்டுமில்லாமல் தற்போது இந்த படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இத்திரைப்படம் விரைவில் முடிவடைய போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில்.
இந்த திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தளபதி விஜயின் இந்த திரைப்படத்திற்கான பிரம்மாண்ட செட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதனை வைரல் ஆக்கி வருவது மட்டுமில்லாமல். டிரெண்டு செய்து வருகிறார்கள்.