youtube இல் பலாயிரம் மில்லியன்களை தாண்டி இந்திய அளவில் பிரபலமான ஒரு பாடல் என்றால் அது என்ஜாய் எஞ்சாமி பாடல் தான். இந்தப் பாடலை பாடியவர் கலைஞர் அறிவு என்கிற அறிவரசு கலைநேசன். இவர் தற்போது தான் காதலிக்கும் நபர் குறித்து அறிவித்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமான ராப் பாடல்களை பாடி வரும் அறிவு பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை தத்துரூபமாக ராப் பாடல்கள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். மேலும் அறிவு தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது பிரபல இயக்குனரான பா. ரஞ்சித் அவர்களுடன் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
அவருடைய அறிமுகத்தின் மூலம் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் உரிமை மீட்போம் என்ற பாடலை பாடி இந்தப் பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அறிவு. அதன் பிறகு வடசென்னை, வந்தா ராஜாவா தான் வருவேன், நாடோடிகள் 2, பட்டாசு, டகால்டி, சூரரைப் போற்று, போன்ற பல படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அறிவு பாடகராக மட்டுமல்லாமல் பாடல்களை எழுதுவதிலும் சிறந்தவராக விளங்கி வருகிறார். அதிலும் குறிப்பாக இவர் பல பாடல்களுக்கு இசையமைத்தும் வருகிறார் அந்த வகையில் இவர் இசையமைத்த தெருக்குரல், மங்கீஸ் வித் 5ஜி, என்ஜாய் என்ஜாமி போன்ற பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக இவர் பாடிய என்ஜாய் என்ஜாமி பாடல் இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. விவசாயின் வலியை எடுத்து அழகாக ராப் மூலம் கூறிய இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்களிலிருந்து ரீல்ஸ் செய்யும் பிரபலங்கள் வரை நடனமாடி தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் அறிவு அவர்கள் தன்னுடைய instagram பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதாவது தனக்கும் மக்கள் இசை குழுவினும் ஒருங்கிணைப்பாளர் கல்பனாவிற்கும் இடையேயான காதலை குறித்து பதிவிட்டு உள்ளார் அதாவது என் திமிரான தமிழச்சி என்று பதிவு செய்திருக்கிறார். இவர் இதை அறிவித்த நிலையில் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.