“ஆசை” திரைப்படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய முழு சம்பளம் இதுதான் – பேட்டியில் சொன்ன எஸ்.ஜே. சூர்யா.! ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.

ajith
ajith

நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவர் நடிக்கும் AK 61வது திரைப்படமும் ஆக்சன் திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மஞ்சு வாரியார், வீரா, சமுத்திரகனி மற்றும் பலர் நடித்து வருகின்றனர் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கயுள்ளது இருப்பினும் இந்த படம் தீபாவளிக்கு வெளிவருமா என்றால் சற்று கேள்விக்குறியாக தான் இருக்கிறது பட குழுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை அதேசமயம் ஷூட்டிங் முடிக்காமல் இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. வசந்த் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆசை இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து பிரகாஷ்ராஜ், நிழல்கள் ரவி, சுவலட்சுமி, ரோகினி, வடிவேலு, தாமு, மயில்சாமி மற்றும் பலர் நடித்து அசத்தியிருந்தனர்.

இந்த படம் அப்பொழுது திரையரங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் அஜித் கேரியரில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனை படமாக இருந்தது இந்த படத்திற்கு பிறகு அஜித் அடுத்தடுத்த பட வாய்ப்பு பெற்று ஆசத்தினார் இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் அஜித்குமார் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார்.

என்பது குறித்து அப்பொழுது உதவி இயக்குனராக பணியாற்றிய sj சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது ஆசை திரைப்படத்திற்காக நடிகர் அஜித்குமார் அப்பொழுது 75 ஆயிரம் சம்பளம் வாங்கினார் என தெரிவித்தார்.