அண்மையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளிவந்த லவ் டுடே திரைப்படம் எதிர்பார்க்காத அளவு வெற்றி பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான லவ் டுடே திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூலை அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதற்கு காரணம் இந்த படத்தை இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இந்த காலத்தில் உள்ள இளைஞர்களை புரிந்து கொண்டு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை படமாக எடுத்துள்ளார் அதனால் இந்த படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து திரையரங்கை நாட வைத்துள்ளது.
இந்த படத்தில் பிரதீப் உடன் இணைந்து இவானா, ரவீனா ரவி, யோகி பாபு, ராதிகா சரத்குமார், சத்யராஜ் போன்ற நடிகர் நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தனர். இந்த நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இதற்கு முன் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற படத்தை முதல் முறையாக இயக்கினார்.
அந்த படத்தில் ரஜினிகாந்தை ட்ரோல் செய்வது போல் ஒரு காட்சி அமைந்திருந்தது அதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதேபோல் இவர் இயக்கிய இரண்டாவது படமான லவ் டுடே படத்தை ஆர் ஜே ஆனந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுவது லவ் டுடே படத்தில் அதிகம் ஆண்களை நல்லவர்களாகவும் பெண்களை மோசமானவர்கள் போல காட்சிகள் அமைத்திருந்தது.
இந்த படத்தில் ஹீரோயின் தங்கைக்கு நான் தவறான மெசேஜ் அனுப்பவில்லை என நிரூபித்த பிரதீப் நல்லவன் ஆனால் படத்தில் பிரபல நடிகையை பதம் பாக்கணும் என்று சொல்லும்போது அது காமெடி என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். பெண்களை இன்னும் சினிமா துறையில் தவறாக சித்திகரிப்பதை எவ்வளவு நாள் தான் பொறுத்துக் கொள்ள முடியும் என விமர்சித்துள்ளார்.