சின்னத்திரையில் விறுவிறுப்பாக தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த சீரியலில் இருந்து ஒரு நடிகை மறைந்தாலும் தற்போது இந்த சீரியலை பற்றி புதிதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த தகவல் என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் இந்த சீரியல் பாண்டியா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதன் முறையாக தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள் மேலும் இந்த சீரியல் வேறு எந்த ஒரு மொழியிலும் இதுவரை ரீமேக் செய்யவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
அந்தவகையில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு உள்ள சீரியலின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இவ்வளவு பிரபலம் ஆகி விட்டதா என கூறி வருகிறார்கள்.