பிச்சைக்காரன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.? அதுக்கு இவர் செட் ஆவாரா.?

pichaikkaran

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைகளுக்கு எப்பொழுதுமே நல்ல மார்க்கெட் இருந்துள்ளது அந்த வகையில் விஜய் ஆண்டனி எப்பொழுதுமே வித்தியாசமான படங்களில் நடிப்பதால் அவர்களுடைய படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது 2016 ஆம் ஆண்டு சசி  இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் பிச்சைக்காரன்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி எமோஷனல் சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் இந்த படம் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக வெற்றியை பெற்றது இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிச்சைக்காரன் 2 உருவாகும் என பட குழு அறிவித்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தன நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்தார்.

பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து யோகி பாபு, காவ்யா தபா, ஜான் விஜய், gill dev மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். படம் கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் சமூக வரவேற்பை பெற்று தற்போது வெற்றி பெற்று வருகிறது. இந்த படத்தின் வசூல் இதுவரை மட்டுமே 40 கோடிக்கு மேல் அள்ளி இருப்பதாகவும் கூறுகின்றன. அன்மையில் கூட இந்த படத்தின் வெற்றியை விஜய் ஆண்டனி பிச்சைக்காரர்களுடன் கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்களும் வெளியாகின.

இப்படி இருக்கின்ற நிலையில் பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தை எடுத்த இயக்குனர் சசி சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது பிச்சைக்காரன் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது வேறு ஒரு நடிகர் என சொல்லி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.. பிச்சைக்காரன் படத்தின் கதை 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

siddharth
siddharth

அப்பொழுது சித்தார்த்திடம் இந்த கதையை சொன்னேன்.. எனக்கு அது புரியவில்லை என கூறினார் பிறகு விஜய் ஆண்டனியிடம் இந்த கதை கூறப்பட்டு பின் உருவாகியதாக தெரிவித்தார். படம் வ வெளியான பிறகு பிச்சைக்காரன் படத்தில் நடிக்காமல் போனது தனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்ததாக சித்தார்த் கூறினார்.