ஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் தவிர்க்கும் முதல் விஷயம் இதுதான் – எத்தனை பேருக்கு இது தெரியும்.!

vijay
vijay

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் வெற்றி படமாக மாறியதை தொடர்ந்து தனது அடுத்த படத்தில் சந்தோஷமாக நடித்து வருகிறார். விஜயின் 66-வது படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார்.

மிக பிரம்மாண்ட பொருள் செலவில் வாரிசு திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் மற்றும் ஆக்சன் கலந்த திரைப்படமாக உருவாகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தளபதி விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. வாரிசு திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று திரையரங்கில் வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக  கூறியுள்ளது. வாரிசு படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக தளபதி கைகோர்த்து தனது 67 வது திரைப்படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்திகள் இணையதள பக்கங்களில் கசிந்து வருகின்றன. அதுபோல தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அது என்னவென்றால் நடிகர் விஜய்க்கு நொறுக்கத்தினி,  junk புட் போன்றவை சுத்தமாக  பிடிக்காதாம், விஜய்க்கு பிடித்ததெல்லாம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி தான்.

இவர் ஏன் நொறுக்குத்தினி திங்க மாட்டார் என்றால் விஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்காதாம் மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் கூட அவருக்கு நொறுக்கி தீனி எடுத்து வந்தால் உடனே வேண்டாம் என சொல்லி விடுவாராம். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டது தற்போது வைரலாகி வருகிறது.