நடிகர் சிம்பு தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருந்து வருகிறார் காரணம் ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி இயக்குனராகவும் பாடகராகவும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். இருப்பினும் அவரது பிரதானம் வந்து நடிப்புதான் அதிலேயும் தொடர்ந்து வெற்றிகளை கண்டு வருகிறார்.
இவர் கடைசியாக நடித்த மாநாடு திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது அதனை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் உடன் கைகோர்த்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக நடிகர் சிம்பு 22 கிலோ உடல் எடையை குறைத்து சூப்பராக நடித்துள்ளார் மேலும் வெந்து தனிந்தது காடு படத்தில் தனது முழு திறமையையும் காட்டியுள்ளார் என சொல்லப்படுகிறது.
நிச்சயம் இந்த படம் ரசிகர்களை கவர்ந்திழும் என சொல்லப்படுகிறது இதனை சிம்புவும் சரி பட குழுவும் நம்பி இருக்கிறது வருகின்ற 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து பத்து தல மற்றும் பல்வேறு புதிய படங்களில் சிம்பு ஒப்பந்தமாகி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சிம்புவிடம் ஏன் திருமணம் மட்டும் பண்ணாமல் இருக்கிறீர்கள் என பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் சிம்பு கூறுகையில் சமீபகாலமாக எனது திருமணம் பற்றி நிறைய கேள்விகள் வருகின்றன. நான் அவரை காதலிக்கிறேன் இவரை திருமணம் செஞ்சுட்டேன் என்றெல்லாம் கூட பரப்புகிறார்கள் நான் 19 வயசுல இருந்ததே இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன். மகனை திருமண கோலத்தில் பார்க்கணும்னு எல்லா பெற்றோர்களுக்கும் ஆசையாக இருக்கும்.
அதேபோல் தான் எனது தாய் தந்தையும் விரும்புகிறார்கள் ஆனால் எனக்கு திருமணம் செய்து கொள்ள சற்று பயமாக உள்ளது அவசர அவசரமாக கல்யாணம் பண்ணிட்டு அதுக்கப்புறம் கருத்து வேறுபாடு சண்டை விவாகரத்து என்று பிரச்சனை வந்துவிடக்கூடாது என்கின்ற பயத்தினால் தான் திருமணத்தை தள்ளி போடுகிறேன் எனக்காக சரியான துணை வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.