தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் தொடர்ந்து ஒரு நடிகராக வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இப்பொழுது கூட பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் ஒரு படம் மற்றும் வாடிவாசல் படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் சூர்யா அண்மைக்காலமாக லோகேஷை சந்தித்தாலே நாம் எப்பொழுது இணைய போகிறோம் என கேட்டு வருகிறாராம் காரணம் லோகேஷ் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக சூர்யாவிடம் கதை சொல்லி வருவதாக கூறப்படுகிறது.
அதிலும் அவர் கூறிய இரும்பு கை, மாயாவி கதை ரொம்ப பிடித்து போனதால் லோகேஷை பார்த்தாலே சூர்யா முதலில் கேட்பது எப்பொழுது நாம் இரும்பு கை மாயாவி படத்தை எடுக்கப் போகிறோம் என கேட்பாராம். அதற்கு லோகேஷ் கனகராஜ் நிச்சயமாக நாம் இருவரும் இணைவோம் இரும்பு கை மாயாவி படத்தை உங்களை வைத்து தான் நான் எடுப்பேன் என உறுதியாக கூறிவிட்டு கிளம்பி விடுவாராம்.
இரும்பு கை மாயாவி படத்தை எடுப்பதற்கு முன்பாக இயக்குனர் லோகேஷ் தளபதி 67 அடுத்ததாக கைதி 2 ஆகிய படங்களை முடிக்கவே கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாகி விடுமாம் அதன் பிறகு தான் சூர்யாவுடன் இணைவதற்கான வாய்ப்பே கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
எது எப்படியோ இரும்பு கை மாயாவி சூர்யாவை வைத்து லோகேஷ் எடுத்தாலே அது ஒரு பெரிய விஷயம் தான். காரணம் லோகேஷ் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் அந்த வகையில் இரும்பு கை மாயாவி சூர்யாவுக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் அது போதும் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.