“ஜகமே தந்திரம்” படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் இது தான்.! உண்மையை உடைத்த கார்த்திக் சுப்புராஜ்.! வைரல் நியூஸ்.

jegame-thanthiram
jegame-thanthiram

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து “ஜகமே தந்திரம்” என்ற திரைப்படத்தில் பணியாற்றி உள்ளார். இதனால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது. இந்த படமும் ரஜினியின் பேட்ட படமும் ஒரே சாயலில் இருப்பதாக படத்தின் டிரைலரை பார்த்த பலரும் கூறிக்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஒரு சிலர் படத்தின் ட்ரைலரை வைத்தே கதையை கற்பனை பண்ணி சொல்ல ஆரம்பித்துவிட்டனர் அந்த அளவிற்கு இந்த ட்ரெய்லரில் படத்தைப் பற்றிய நிறைய தகவல்கள் கிடைத்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். இருப்பினும் இந்த ட்ரெய்லர் வேற லெவல் ட்ரெண்டாகி வருகிறது இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த ட்ரைலரை கண்டுகளித்துள்ளனர்.

இந்த படம் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி OTT தளத்தில்  வெளியாக உள்ளது இது குறித்து  தனுஷ் சூசகமாக கூறியது. இந்த படத்தை நாங்கள் திரையரங்கில் வெளியிட முடிவு செய்தோம் ஆனால் எதிர்பாராத விதமாக அது நடக்கவில்லை தற்போது OTT தளத்தில் ரிலீசாகிறது இந்த படத்தை டிவியில் ஏதோ அல்லது போன் மூலமாகவோ பார்த்தால் சூப்பராக இருக்கும் என சொல்லி உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதாவது இந்த திரைப்படத்திற்கு முதன்முதலில் தனுஷின் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட சுருளி என்ற பெயரைத்தான் படத்தின் டைட்டிலாக வைக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்திருந்தாராம்.

jegame-thandiram
jegame-thandiram

ஆனால் ரஜினியின் நினைத்தாலே இனிக்கும் படத்தில் ஒரு பாடலில் ஜகமே தந்திரம் என பெயர் வரும் அதையே படத்தின் பெயராக வைத்து  விட்டாராம் கார்த்திக் சுப்புராஜ்.