கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து திரிஷா, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா மற்றும் பலர் டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தியிருப்பார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருந்தது.
படம் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் ஒரு புதிய சாதனை படைத்தது பேட்ட. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விக்ரமை வைத்து மஹான், தனுஷை வைத்து ஜகமே தந்திரம் இப்பொழுது 777 சார்லி என்ற படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படத்தில் ஒரு நாயின் கதாபாத்திரம் தான் முக்கியமானதாக கருதப்படுகிறது இந்த படத்தில் கன்னட நடிகர் ரக்ஷிட் ஷெட்டி ஹீரோவாக நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட பதில் நடிகர் சசிகுமார் வந்து போகும் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது வேறு ஒரு நடிகர் தான் என கூறினார் அந்த பிரபலம் வேறு யாருமல்ல கன்னட நடிகர் ரக்ஷிட் ஷெட்டி தான்.
அப்பொழுது அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்ததால் அவரது கால்ஷீட்டை கிடைக்காமல் போனது வேறு வழியில்லாமல் அந்த கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என கருதினோம் ஒருவழியாக சசிகுமார் அந்த கதாபாத்திரத்திற்கு சூப்பராக நடித்து அசத்தினார்.