தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்னாக மட்டும் வலம் வராமல் கெஸ்ட் ரோலில், குணத்திர கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்து வருவதால் மற்ற நடிகைகளை விட இவருக்கு படவாய்ப்புகள் சினிமா உலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்க காரணமாக அமைகின்றன. சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக தொகுப்பாளராக சின்னத்திரையில் தனது பயணத்தை தொடர்ந்த அவர் படிப்படியாக முன்னேறி தான் வெள்ளித்திரைக்கு நுழைந்தார்.
முன்னேறி வந்த பாதையை எப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை சரியாக புரிந்து வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் அதனால்தான் ஹீரோயினாக இருந்தாலும் அதற்கு முன்பாக குணச்சித்திர கதாபாத்திரம் தான் நம்மை இந்த லெவலுக்கு எடுத்துச் சென்று அதை நன்றாக புரிந்து கொண்டதால் தற்போது ஹீரோயின் மற்றும் மற்ற கெஸ்ட் ரோல் போன்றவற்றை தயங்காமல் நடிக்கிறார்.
இப்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு டஜன் படங்களுக்கு மேலாக வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமா உச்சத்தில் இருக்கிறார். சினிமாவுலகில் ஐஸ்வர்யா ராஜேஷை உயர்த்திவிட்டது என்னமோ காக்கா முட்டை திரைப்படம் தான் இந்த திரைப்படம் 2015ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி கண்டது இந்த படத்தில் அவருடன் இணைந்து விக்னேஷ், ரமேஷ், ரமேஷ் திலக், யோகி பாபு போன்ற பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் இதுவரை வெளிவந்து ஆறு வருடங்கள் ஆகியது இதன் நினைவாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர் கூறியது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது 6 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இதே தேதியில் காக்கா முட்டை படம் வெளியானது எப்பொழுதும் என்னுடைய இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் மிகச்சிறந்த படம்.
தடைகளை உடைத்து என்னுடைய சினிமா வாழ்க்கையை உயர்த்தியது இந்த படத்தை கொடுத்த இயக்குனர் மணிகண்டன் மற்றும் தயாரிப்பாளர் தனுஷ், வெற்றி மாறன் ஆகியோருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி கூறினார்.
How time flies! Exactly on this day, 6 years ago, #KaakaMuttai released. A landmark film that will always remain close to my heart, it broke barriers and made my career soar! Immensely thankful 2 director @dirmmanikandan & producers @dhanushkraja & @VetriMaaran sir 4 this film pic.twitter.com/AnYUwRY9i5
— aishwarya rajesh (@aishu_dil) June 5, 2021