என்னுடைய சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட படம் இதுதான் – நடிகை தேவையானி.!

devaiyani
devaiyani

90 கால கட்டங்களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை தேவயானி இவர் மும்பையை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார் குறிப்பாக இவர் அஜித், விஜய், சரத்குமார், கமல் போன்ற நடிகரின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.

வெற்றியை மட்டுமே ருசித்து ஓடிக் கொண்டிருந்த இவருக்கு தமிழை தாண்டி ஹிந்தி, வங்காளம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்தார் தேவயானி சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஹீரோயின் கதாபாத்திரங்கள் தாண்டி கிளாமர் கதாபாத்திரங்களிலும் ஆரம்பத்தில் புகுந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சினிமா உலகில் வெற்றிகனியை ருசித்த இவர் 2001 ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது இரு மகள்கள் இருக்கின்றனர். இப்பொழுது பெருமளவு சினிமா வாய்ப்புகள் நடிகை தேவயானிக்கு கிடைக்காமல் உள்ளன இதனால் அவர் சின்னத்திரை பக்கம் தாவி உள்ளார்.

தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளில் ஜட்ஜ் ஆக பணியாற்றி வந்த இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்பொழுது புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த சீரியலும் தற்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தேவயானி தனக்கு பிடித்த படம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். நான் பல்வேறு படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய பேவரட் திரைப்படம் நான் கமலி கதாபாத்திரத்தில் நடித்த காதல் கோட்டை படம் தான் என வெளிப்படையாக கூறியுள்ளார். என் வாழ்நாளில் மறக்க முடியாத திரைப்படம் என வெளிப்படையாக அவர் கூறினார் இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு பைரலாகி வருகிறது