தெலுங்கில் சின்ன சின்ன படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி படத்தின் வெற்றியால் இந்திய அளவில் பேசப்பட்டார் பாகுபலி 2 படத்தின் ஆயிரம் கோடி வசூலுக்கு பிறகு அவர் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக ராஜமௌலி பார்க்கப்பட்டார். இதனால் பேரும் புகழும் கிடைத்தது.
சிறு இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி ராம்சரண், ஜூனியர் என்டிஆரை வைத்து RRR திரைப்படம் எடுத்தார். படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. மேலும் இந்த படம் பல்வேறு விருதுகளையும் அள்ளிக் குவித்தது. அடுத்ததாக இவர் தெலுங்கு டாப் ஹீரோ மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதையல் தேடும்..
ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் இந்த படத்திற்காக சுமார் 500 கோடி பட்ஜெட் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தீ நியூயார்க் இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அதில் இந்திய படங்கள் குறித்து பேசி உள்ளார்.
மேலும் நியூயார்க் மக்கள் பார்க்க வேண்டிய இந்திய திரைப்படங்கள் இது என்பது குறித்தும் அவர் பேசி உள்ளார் அவர் முதலில் சொன்னது.. சங்கராபரணம், முன்னா பாய் எம்பிபிஎஸ், பண்டித் ஃகுயின், பிளாக் ப்ரைடே மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தையும் பாருங்கள் என அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது தமிழ் சினிமாவில் இயக்குனர் ராஜமௌலிக்கு பிடித்த ஒரே ஒரு திரைப்படம் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் திரைப்படம் மட்டும் தான். இந்த தகவலை தனுஷ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றனர்.