நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறப்பாக கம்பேக் கொடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக நடித்த மாநாடு படத்தில் நடித்தார். இவர் கடைசியாக வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் அடுத்தடுத்த இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் இதனால் சிம்புவின் மார்க்கெட் தற்போது அதிகமாகிக்கொண்டே இருக்கிறது மேலும் தனக்கான இடத்தை பிடிக்க அவரும் ஓடுவதற்கு ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது அண்மையில் கூட வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம்.
பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது ரசிகர்களும் செம்ம உற்சாகத்தில் இருக்கின்றனர். நடிகர் சிம்பு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு அமைதியாகவும் படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து அசத்துகிறார். முன்புபோல் பஞ்ச் டயலாக்குகள் பேசாமல் படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்து வருகிறார்.
மறுபக்கம் பார்ட்டி என்பதே தற்போது தவிர்த்து தான் ஒரு சிறந்த மனிதனாக அவதாரம் எடுத்துள்ளது இன்னும் அவரது ரசிகர்களை ஆட்டம் போட விட்டுள்ளது. ஆம் முற்றிலுமாக சிம்பு இப்போது மாறி உள்ளதால் அவரது வளர்ச்சி தற்போது வேற லெவலில் இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர் ஆம் சிம்பு தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார் அண்மையில் கூட வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிம்புவுடன் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்த நிதி அகர்வால் சிம்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பேசி உள்ளார் அதில் அவர் கூறியது சிம்பு ஒரு தங்கமான இதயம் கொண்ட ஒரு மனிதர் என அவர் குறிப்பிட்டுள்ளார் இச்செய்தி சிம்பு ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.