தமன்னாவை நம்ப வைத்து ஏமாற்றிய ஜெயிலர் படம்.? முத்துவேல் பாண்டியன் மொத்த குடும்பமும் இதுதான்

jailer
jailer

Jailer movie : தர்பார், அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் உடன் இணைந்து “ஜெயிலர்” படத்தில் நடித்துள்ளார். படம் மிகப்பெரிய ஆக்சன் படமாக உருவாகியுள்ளது.  ரஜினியுடன் கைகோர்த்து மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார்..

தமன்னா, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக வெளியாகி உள்ளது. அதற்கு முன்பாக ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்து இழுக்க படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்துள்ளது.

அதன்படி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும்  வைரலாகி பலரையும் நடனமாட வைத்தது அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு ஏத்த மாதிரி  ஹுக்கும் பாடல் வெளியானது. இசை வெளியீட்டு விழா , showcase அனைத்துமே ட்ரெண்டிங் தான்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் வரியில் உருவான “ரத்தமாரே பாடல்” வெளியாகி உள்ளது.  முழுக்க முழுக்க இந்த பாடல் எமோஷனல் கலந்த ஒரு பாடலாக இருந்ததால் பலரது மனதையும் கவர்ந்தது இந்த பாடலில்  முத்துவேல் பாண்டியனின் மொத்த குடும்பத்தையும் காட்டியுள்ளனர் ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன்.

மகன்னாக வசந்த் ரவி அவருடைய மனைவி மற்றும் மகன் ரித்துராக்ஸ் போன்றவர்கள் நடித்துள்ளனர். இதன் மூலம் ஒன்றே ஒன்று மற்றும் நமக்கு தெரிகிறது அதாவது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடி தமன்னா கிடையாது.

rajinirajini
rajini

மேலும் அவருக்கு பெரிய அளவு கதாபாத்திரமும் இல்லை அவர் ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு மட்டுமே அவர் வந்து போகிறார் என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது. இதனால் தமன்னா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் இதோ நீங்களே அந்த பாடலை நீங்களே பாருங்கள்..