சினிமாவுலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒவ்வொரு சீனையும் சிறப்பாக எடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைகின்றனர். அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், எஸ் எஸ் ராஜமௌலி ஆகியோர்கள் கைதேர்ந்தவர்கள் இவர்கள் இருவரும் எடுக்கும் திரைப்படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்து இழுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடிக்கின்றன.
இதனால் எஸ்எ ஸ் ராஜமவுலி மற்றும் ஷங்கர் படங்களில் நடிக்க தற்போது நடிகர் நடிகைகள் ஆசைப்படுகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பிரசாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரமாண்ட இயக்குனர் என்றால் என் நினைவுக்கு வருபவர் ஆர் கே செல்வமணி என கூறி உள்ளார் இது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
இப்பொழுது இருக்கும் இயக்குனர்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் பல காட்சிகளை சிறப்பாக எடுக்கின்றனர் ஆனால் 90 காலகட்டங்களில் மிக பிரம்மாண்டமான எதிர்பார்க்காத காட்சிகளை கொடுத்தவர் ஆர் கே செல்வமணி. 90 காலகட்டங்களில் பிரமாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை அவர்தான் வைத்திருந்தார்.
ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தார். செம்பருத்தி, கண்மணி, புலன் விசாரணை 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பிரசாந்த் பேசியது : ஒரு பாடலுக்கு 500 நடன கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக எடுத்திருந்தார்.
மேலும் சினிமாவில் இப்படி எடுக்க முடியுமா என்பதை சாதித்துக் காட்டியவர் ஆர்கே செல்வமணி என பிரசாந்த் புகழ்ந்து பேசினார் மேலும் அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என பிரசாத் கூறினார். இப்பொழுது வேண்டுமானால் எஸ் எஸ் ராஜமௌலி, சங்கர் என பலர் இருந்தாலும் அவருக்கு முன்பாகவே பிரம்மாண்டமாக சில காட்சிகளை எடுத்து உள்ளார் செல்வமணி என்பது குறிப்பிடத்தக்கது.