அசுரன் படத்துக்கும் சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்திற்கும் உள்ள வித்தியாசமே இதுதான் – பிரபல எழுத்தாளர் விளக்கம்.

simbu-and-dhanush
simbu-and-dhanush

நடிகர் சிம்பு மாநாடு திரைப் படத்தின் சூட்டிங்கை முடித்த பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் கௌதம் மேனனுடன் இணைந்து நதிகளிலே நீராடும் சூரியன் என்ற தலைப்பில் பணியாற்ற உள்ளார் என்ற செய்திகள் வெளியான நிலையில் திடீரென அந்த படத்தின் டைட்டிலை மாற்றி “வெந்து தணிந்தது காடு” என்ற தலைப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் எடுக்கப்பட்டு வருகிறது அதை தொடர்ந்து இந்த படம் சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் எடுக்கப்பட உள்ளன. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வேற மாதிரி இருந்ததால் ரசிகர்கள் தனுஷின் கர்ணன் மற்றும் அசுரன் படம் போல் இந்த படம் இருக்குமா என்பது  கேள்வியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது : இந்த திரைப்படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என பெயர் வைக்கப் பட்டிருந்தாலும் பின் வெந்து தணிந்தது காடு என பெயர் வைக்கப்பட்டது உண்மைதான். ஆனால் இந்த படம்  கிராமத்து சாயலில் ஆன படம் கிடையாது அதற்கு எதிர்மறையான படம்தான் இது.

நகர்புறத்தில் நடக்கும் மென்மையான காதலை மையப்படுத்தி இருக்கும் இந்தப் படம் இந்த படத்தின் கதைக்காக சிம்பு வரவழைக்கப்பட்டார் ஆனால் அவருக்காக இந்த படத்தின் கதையை உருவாக்கப்படவில்லை என கூறினார் மேலும் சிம்பு மெலிந்து போய் காணப்படுவதால் இந்த படத்திற்கு அவர் சரியாக புரிந்து உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படம் கௌதம் மேனன் எடுக்கும் வழக்கமான படத்திலிருந்து மாறுபட்டு இருக்கும் கரடுமுரடான அழகை காட்டும் படமாக இது இருக்கும். இதில் கிராமத்து கதையும் வந்து போகும் ஆனால் வெந்து தணிந்தது காடு படத்தில் மிகையான சாகசங்கள் கிடையாது நம்பக தன்மையுடைய படமாக இது இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.