Pandiyan stores serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிய இருக்கும் நிலையில் இந்த சீரியலின் கடைசி எபிசோட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அறிமுகமான காலகட்டத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியலுக்கு சமீப காலங்களாக மக்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
டிஆர்பி-யில் முதல் ஐந்து இடங்களை பிடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சமீப காலங்களாக 10வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. எனவே விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய இருப்பது ஏராளமான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்பொழுது வரையிலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினையும், மருமகள்களின் ஒற்றுமையையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜ், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து வருகின்றனர். தற்பொழுது நான்கு அண்ணன் தம்பிகளுக்கும் குழந்தை பிறந்திருக்கும் நிலையில் இந்த சீரியலை சிவ சேகர், டேவிட் சார்லி ஆகியோர்கள் இயக்க பிரியா தம்பி திரைக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் உருவாகி வருகிறது.
இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது முடிவுக்கும் வர இருக்கும் நிலையில் இரண்டாவது பாகத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம். அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதையின்படி தனத்திற்கு புற்றுநோய் குணமடைந்து. அண்ணன் தம்பிகள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்திற்கு வாழ அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரவுள்ளது.
இதனை அடுத்து வரும் செப்டம்பர் 30ஆம் தேதியோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாவது பாகமும் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.