அட்லீ, ஷாருக்கான் உடன் இணையும் படத்தின் தற்பொழுதைய நிலை இது தான்.!

shahruk-khan-and-atlee

தமிழ் சினிமா உலகிற்கு சிறப்பான வெற்றி படங்களை கொடுத்து கொண்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார் அட்லி. இவர் ஷங்கரின் அசிஸ்டெண்ட் ஆக இருந்து பின்னாட்களில் தனது திறமையை வளர்த்து இயக்குனராக மாறினார்.

இயக்குனர் ஆனா உடனே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ஆர்யாவை வைத்து அவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கினார் இத்திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது இதன் மூலம் அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய்யை வைத்து மெர்சல் தெறி பிகில் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இவர் இந்திய அளவில் பிரபலமடைந்தார். அத்தகைய படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தின. அதன் முலம் தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டுதோடு மட்டுமில்லமால் பிற மொழி பக்கமும் திரும்பி உள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் ஷாருக்கானுடன் இணைந்து படம் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகின ஆனால் திடீரென சில மாதங்களுக்கு முன்பு இது எல்லாம் வதந்தி என சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது இந்த நிலையில்  அட்லி அவர்கள் தனது ஐந்தாவது படத்தை ஜெயம் ரவியை இயக்கப் போவதாகவும் இணையதளத்தில் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் தற்பொழுது ஷாருக்கானுடன் இவர் இணையும் படம் டிராப் ஆகவில்லையாம் வேலைப் பணிகள் நடப்பதற்கு கொஞ்சம் தாமதமாகி வருகிறதாம் இதனாலேயே படப்பிடிப்பு ஒத்தி உள்ளது மேலும் கொரோனாவும் ஒரு  காரமாகவும் இருப்பதால்  சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

தற்பொழுது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஷாருக்கான் பிறந்த நாளான நவம்பர் 2-ஆம் தேதியன்று தெரியவரும் என கூறப்படுகிறதே இதனை அட்லி அவர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.