தமிழசினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் அழகி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பார்த்திபன் நடித்து இருப்பார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நந்திதா தாஸ் மற்றும் தேவயானி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்தது மட்டுமில்லாமல் பிலிம்பேர் விருதை பெற்றுக் கொடுத்து கௌரவித்தது. மேலும் இந்த திரைப்படத்தில் நந்திதாவுக்கு இளம் வயது பார்த்திபனாக நடித்த சிறுவயது பார்த்திபன் தான் சதீஷ்.
இவர் சேரன் இயக்கத்தில் வெளியான சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தில் சேரனின் தம்பியாக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் இவ்வாறு அழகி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது நமது சதீஷ் பன்னிரண்டாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல என்ற திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார் இதனை தொடர்ந்து கூட்டாளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் திரைப்படமும் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில் தற்போது சதீஷ் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க நான் தயார் என பேட்டியில் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய பூனைமீசை மருந்து அரும்பு மீசையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது